கொரோனா காலத்தில் 64 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஷ்ராமிக் ரயில்கள் மூலமாக பாதுகாப்பாக வீட்டிற்கு சென்றதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் விவாதத்திற்கு பதிலளித்த அவர், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச்செல்ல 43 வழிகளில் 4,600 ஷ்ராமிக் ரயில்கள் இயக்கப்பட்டன என்றும், அவர்களுக்கு இலவச உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டன என்றும் கூறினார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ரயில்கள் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றியதாகக் கூறினார்.