இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதி பாஜக எம்பியான ராம் ஸ்வரூப் சர்மா, டெல்லியில் உள்ள தமது இல்லத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆர்எம்எல் மருத்துவமனைக்கு அருகே உள்ள கோமதி அடுக்கு குடியிருப்பில் வசித்து வந்த அவர், மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பணியாளர் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
2014 மற்றும் 2019 ல் அவர் தொடர்ந்து இரண்டு முறை மண்டி தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.