மும்பையில் அம்பானி வீட்டருகே வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி சச்சின் வாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 25ம் தேதி தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரினுள் வெடிகுண்டுகள் செய்யப் பயன்படும் ஜெலட்டின் குச்சிகள் இருந்தன. இதுகுறித்து விசாரணை நடந்த போது, காரின் உரிமையாளர்ன மன்சூக் ஹிரன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
என்ஐஏ விசாரித்து வந்த இந்த வழக்கில் சச்சின் வாஸ் என்ற காவல்துறை அதிகாரி குறிப்பிட்ட காரை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறை அதிகாரி சச்சின் வாஸை பணியிடைநீக்கம் செய்து மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.