கர்நாடகாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் பெங்களூருவில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த சர்வதேச திரைப்பட விழா காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் வரும் 24ம் தேதியிலிருந்து 31ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படும் என கர்நாடகா சலானசித்ரா என்ற அமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் பெருந்தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து திரைப்பட விழாவைத் தள்ளிவைக்கும் படி கர்நாடக சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.
இதையடுத்து பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.