இந்திய ராணுவ ஆட்சேர்ப்பதில் நடந்த முறைகேடு தொடர்பாக 6 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்கான தேர்வில் கேள்வித்தாள் வெளியானது அதிர்வலையை ஏற்படுத்தியது. பஞ்சாபில் உள்ள தேர்வு கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கேள்வித்தாள் வெளியானது ராணுவ புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சேர்ப்பு முறைகேடு வழக்கில் லெப்டினன்ட் கர்னல் பதவியிலுள்ள 6 அதிகாரிகள் மற்றும் பலர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.