பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைப்பது பற்றி மத்திய மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை இந்த ஆண்டில் மட்டும் 26 முறை உயர்த்தப்பட்டு வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்நிலையில் மக்களவையில் உறுப்பினரின் வினாவுக்குப் பதிலளித்த அமைச்சர் அனுராக் தாக்கூர், பெட்ரோலியப் பொருட்களைச் சரக்கு சேவை வரியின் கீழ் கொண்டு வருவது பற்றிப் பேசுவதற்கு அரசு தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைப்பது பற்றிப் பரிசீலிக்க மத்திய அரசு தயார் என்றும், மாநில அரசும் மதிப்புக் கூட்டு வரியைக் குறைப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.