பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பின் போதும், 5 நாள் பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவது வழக்கமாகும். மாத பூஜையை முன்னிட்டு 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அதன் தொடர்ச்சியாக வரும் 19-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்குகிறது.
மாத பூஜை மற்றும் விழா நாட்களில் 15-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தி கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.