மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வரும் திங்கட்கிழமை முதல் ஒருவார காலம் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில் அங்குள்ள சந்தையில் இன்றியமையாப் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் அதைக் கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் 15 முதல் ஒருவார காலம் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்குள்ள சந்தையில் இன்று மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் குவிந்தனர்.