பொறியியல் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க, பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம் இயற்பியல் பயின்றிருப்பது கட்டாயமல்ல என்று அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்கான கவுன்சில் கையேட்டில் வெளியிட்ட அறிவிப்பை, கடும் சர்ச்சை எழுந்ததால் அடுத்த சில மணி நேரங்களில் திரும்பப் பெற்றுக் கொண்டது.
புதிய அறிக்கை ஒன்று ஓரிரு நாளில் வெளியாகும் என்று அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.