கேதார்நாத் கோவில் பக்தர்களுக்காக வரும் மே 17ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என உத்தரகாண்ட் சார் தாம் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி இக்கோயில் மூடப்பட்டது. இதனிடையே நவம்பர் 19 ஆம் தேதி மூடப்பட்ட பத்ரிநாத் கோயில் பக்தர்களுக்கு மீண்டும் மே 18ல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில்கள் மே 14 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது.