கேரள மாநிலத்தில் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடக்கும் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்க இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 17ஆம் தேதி முதல் பொது தேர்வுகள் தொடங்கும் என அறிவிப்பட்டு இருந்தது. ஆசிரியகள் தேர்தல் பணிக்கு செல்வதாலும், பள்ளிகள் தேர்தல் பணிக்காக பயன்படுத்தபடவும் உள்ளது.
இந்நிலையில் தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி அம்மாநில தேர்தல் அலுவலர், தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி வைத்தார். இது தொடர்பாக வரும் ஏப்ரல் 8 முதல் 30ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.