உத்தரகண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத் இன்று தனது அமைச்சரவையை விரிவுபடுத்த உள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு பாஜக வெற்றி பெற்று ஆட்சியைக் கைபற்றியது. திரிவேந்திர சிங் ராவத் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து தீரத் சிங் ராவத் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டு கடந்த புதன்கிழமை பதவியேற்றார்.
ராஜ்பவனில் நடைபெற்ற ஒரு எளிய விழாவில் ஆளுநர் பேபி ராணி மவுர்யா அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.