மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனா வேகம் எடுத்துள்ளதால் நேற்றிரவு முதல் மீண்டும் இரவு நேர அம்மாநிலத்தின் சில இடங்களில் ஊரடங்கு அமலுக்கு வந்தது.
கல்யாண், டோம்பிவிலி மற்றும் நந்துர்பர் ஆகிய மாவட்டங்களில் இரவு பத்து மணி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் இரவு 9 மணிக்கு மேல் கடைகள், பார்கள், வணிகவளாகங்கள் திறந்திருக்க அனுமதி இல்லை.
ஊரடங்கு அமல்படுத்தப்படும் பகுதிகளில் இரவு நேரத்தில் சிவராத்திரியைக் கொண்டாட சிவாலயங்களைத் திறக்க அனுமதி இல்லை. திருமண நிகழ்ச்சிகள் 7 மணி முதல் 9 மணி வரை மட்டும் நடத்தலாம்.கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்ட்ராவில் 13 ஆயிரத்து 659 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.