மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி பவானிப்பூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்முறை நந்திகிராமில் இருந்தும் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.
துணிச்சல் இருந்தால் நந்திகிராமில் மட்டும் போட்டியிட வேண்டும் என பாஜக தலைவர்கள் சவால் விடுத்தனர். இதை ஏற்று நந்திகிராமில் இருந்து மட்டும் போட்டியிடுவதாக அறிவித்த மம்தா பானர்ஜி இன்று அதற்கான வேட்புமனுவைத் தேர்தல் அதிகாரியிடம் அளித்தார்.
முன்னதாக அவர் நந்திகிராமில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். சிவ்ராம்பூரில் உள்ள துர்க்கை கோவிலுக்கும் சென்று வழிபாடு நடத்தினார்.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகத் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் ஏப்ரல் முதல் நாளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.