கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விமானிகள் மற்றும் கேபின் குழுவினர் 48 மணி நேரம் பறக்க மாட்டார்கள் என்று விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விமானிகள் மற்றும் விமான கேபின் குழுவினர் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளலாம் என்றும் ஆனால் ஊசி போட்ட 30 நிமிடங்கள் வரை எதிர்விளைவுகள் ஏதும் உள்ளதா என அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விமானிகள் மற்றும் கேபின் குழுவினர் அடுத்த 48 மணி நேரத்திற்கு விமானத்தில் பறக்க மருத்துவ ரீதியாக தகுதியில்லாதவர்கள் என கருதப்படுவர் என்பதால் அவர்கள் விமானத்தில் பறக்க அனுமதி இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.