கேரள தங்கம் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் இவ்வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயன் பெயரை இணைக்கும்படி கட்டாயப்படுத்தியதாக காவல் துறை அதிகாரி ஒருவர் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
கேரளாவில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தங்கம் கடத்தல் வழக்கில் பல்வேறு புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. சுங்கத்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் ஸ்வப்னா சுரேஷ் முதலமைச்சர் பினராயி விஜயன் பெயரை குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பினராயி விஜயன் பெயரை கூறும்படி கட்டாயப்படுத்தப்பட்டார் என ஸ்வப்னாவுக்கு காவலாக நியமிக்கப்பட்டிருந்த ஒரு உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஸ்வப்னா சுரேஷ் சித்ரவதை செய்யப்பட்டார் என்றும் தூங்க விடாமல் அவரை துன்புறுத்தினர் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.நிர்ப்பந்தம் காரணமாகவே ஸ்வப்னா வீடியோ மூலம் அளித்த வாக்குமூலத்தில் பினராயி விஜயன் பெயரை குறிப்பிட்டார் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.