கடந்த ஒருவார காலமாக எல்லைப்பகுதியில் எந்த வன்முறைச் சம்பவமும் நிகழவில்லை என்றும் பூரண அமைதி நிலவுவதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எல்லைத்தாண்டி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வந்ததால் எல்லையில் எப்போதுமே பதற்றமான நிலை காணப்பட்டது. இந்நிலையில் இந்தியா -பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையை அடுத்து இருதரப்பினரும் போர் நிறுத்தத்தை கடைபிடிக்க உறுதி செய்தனர்.
இந்த உடன்படிக்கைக்குப் பிறகு துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்து எல்லையில் அமைதி நீடிக்கிறது.