சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு தெலங்கானா மாநிலத்தில் பணியாற்றும் அனைத்துப் பெண் ஊழியர்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பெண்கள் எல்லா துறைகளிலும் ஆண்களுடன் போட்டியிடுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகையில் 50 விழுக்காடு உள்ள பெண்கள், சரியான வாய்ப்பு வழங்கப்பட்டால் அதிசயங்களைச் செய்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
எனவே மாநிலத்தில் உள்ள அனைத்து பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை விடப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.