துரோகம் செய்பவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் ஒரு போதும் தலைவணங்காது என்று அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
அம்பத்தூரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய நடிகர் கமல்ஹாசன், மக்களிடம் பாசம், பக்தி இருப்பதால் அவர்களுக்கு தலைவணங்குவேன் என்றார்.
எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்று வீட்டு வாசலில் எழுதி போடுங்கள் என்றும் கமல் கேட்டுக்கொண்டார்.