ரயில் நிலைய நடைமேடைச் சீட்டு ஐம்பது ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவலைத் தடுக்கத் தற்காலிக ஏற்பாடாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
ரயில்களில் பயணிப்போர் தவிர மற்றவர்கள் நிலையங்களுக்கு வருவதைத் தவிர்ப்பதற்காக நடைமேடைச் சீட்டுக் கட்டணத்தைக் கோட்ட மேலாளர்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என 2015ஆம் ஆண்டு முதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டின் முதன்மையான ரயில் நிலையங்களில் நடைமேடைச் சீட்டுக் கட்டணம் 50 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் கூட்டம் சேர்வதைக் குறைத்துக் கொரோனா பரவலைத் தடுக்கவே தற்காலிகமாக நடைமேடைச் சீட்டுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.