டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் விசாகா கமிட்டியில் இடம் பெற்றிருந்த ஐ.ஜி அருண்குமார் மாற்றப்பட்டு, அவருக்குப் பதில் ஐ.ஜி. நிர்மல் குமார் ஜோசி நியமிக்கப்பட்டுள்ளார். பெண் எஸ்பிக்கு, பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது.
அதில் கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், ஐஜி அருண் உள்பட 6 பேர் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில் அந்த குழுவில் இருந்து ஐஜி அருண் குமார் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஐ.ஜி. நிர்மல் குமார் ஜோசி நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
ஐஜி அருண் நீண்ட விடுமுறையில் இருப்பதால் நீக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், ஐபிஎஸ் அதிகாரிகள் வாட்ஸ்அப் குழுவில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்ததே காரணம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.