ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 14 கோடியே 13 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், பணப் பட்டுவாடா மற்றும் வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்க இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் திங்கட்கிழமை தமிழகம் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கூகுள் பே, போன் பே, மூலமாக வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்யப்படுவதை தடுக்க வங்கிகளில் பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட்டுவருவதாகவும் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.