பிரதமர் மோடியும் ஸ்வீடன் நாட்டு பிரதமர் ஸ்டீபன் லாப்வெனும் (Stefan Löfven) காணொலி வாயிலாக இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இருதரப்பு நல்லுறவுகள் குறித்தும் வர்த்தகம் குறித்தும் இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட உள்ளது. இந்தியாவில் சுகாதாரம், ஆட்டோ உற்பத்தி போன்ற பல துறைகளில் 250க்கும் மேற்பட்ட ஸ்வீடன் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்கவும் இந்தப் பேச்சுவார்த்தையில் திட்டமிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல் தடுப்பது குறித்தும் தடுப்பூசி பயன்பாடு குறித்தும் முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.