இந்தியாவுக்கு எதிரான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்களில் சுருண்டது.
அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்கள் உட்பட 6 பேர் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.
அதிகப்பட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55 ரன்களும், டான் லாரன்ஸ் 46 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் அக்சர் பட்டேல் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.