வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து காதல் சின்னமான தாஜ்மஹாலில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
மிரட்டலை அடுத்து தாஜ்மஹால் வளாகம் முழுதும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது வெடிபொருட்களோ குண்டுகளோ எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் வெறும் புரளி என்றும் ஆக்ரா மண்டல கூடுதல் காவல்துறை தலைவர் கிருஷ்ணா தெரிவித்தார்.
அதன்பின்னர் காலை 11.15 மணி வாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் தாஜ்மஹாலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். எனினும் கூடுதல் சிஐஎஸ்எஃப் வீரர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.