பல்வேறு சோதனைகளுக்கு பின்னர் அமெரிக்கா ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் எஸ் 10 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
நிலவிற்கு மனிதர்களை அழைத்து செல்வதற்கான ஸ்டார்ஷிப் எஸ் 10 விண்கலத்தை உருவாக்கும் முயற்சியில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. பல்வேறு தோல்விகளுக்கு மத்தியில் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
ஆகாயத்தில் 10 கிலோ மீட்டர் தூரம் பயணம் சென்ற நிலையில் மீண்டும் வெற்றிகரமாக தரையிரங்கியது. இதையடுத்து 2023-ஆம் ஆண்டு மனிதர்களை நிலவிற்கு கொண்டு செல்லும் திட்டத்திற்கு எலன் மஸ்க் அழைப்பு விடுத்து உள்ளார்.
மேலும் விண்கலம் ஏவப்படுவதை நேரலை வெளியிடப்பட்ட நிலையில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கண்டு ரசித்தனர்.