உருளைக் கிழங்கு விலை மொத்த சந்தைகளில் திடீரென சரிந்துள்ளது.
இதனால் விவசாயிகள் பயிரிட்ட தொகையை திரும்பப் பெற முடியாமல் பெரிய இழப்புகளை சந்தித்து வருகின்றனர். காய்கறிகளில் உருளைக்கிழங்குக்கு தனியிடம் உள்ளது. வடமாநிலங்களில் இதன் பயன்பாட்டும் அதிகம். தற்போது உருளைக்கிழங்கு பயிருக்கான சீசன் நடைபெறுகிறது.
அதிகளவிலான விளைச்சல் காரணமாக விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.ஆக்ராவில் இப்பயிர் அதிகளவில் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் உருளை பயிரிட்டு லாபம் கண்ட விவசாயிகள் இந்த ஆண்டு அரசின் வரிவிதிப்புகளால் நட்டத்தையும் இழப்புகளையும் எதிர்நோக்கியுள்ளதாக கூறுகின்றனர்.