அரசுக்கு எதிரான கருத்துகளை கூறுவது தேசவிரோதமாகாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 365 நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் மேல் முறையீட்டு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது.
பரூக் அப்துல்லாவின் கருத்து தேசவிரோதமானது என்றும் இது பிரிவினைவாதிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்றும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் பரூக் அப்துல்லாவின் கருத்தில் தேச துரோகத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று கூறிய நீதிபதிகள் அரசுக்கு விரோதமாக பேசும் ஒருவர் தேசத்துக்கு விரோதமானவராக ஆக மாட்டார் என்று தெளிவுபடுத்தினர்.
அண்மைக்காலங்களில் மத்திய மாநில அரசுக்கு எதிராகப் பேசியதற்காக திஷா ரவி, கங்கணா ராவத் , தெலுங்கு புரட்சிக் கவிஞர் வராவர ராவ் உள்ளிட்டோர் மீது தேச துரோக வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்