ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாட்டின் 22 பகுதிகளில் 57 ஆயிரத்து 123 கோடி ரூபாய்க்கு ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றையை ஏலம் எடுத்திருப்பதாக அறிவித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஏலம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. அதில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 800, 1800, 2300 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளை மொத்தம் 57 ஆயிரத்து 123 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறது. இதனை 5ஜி சேவைக்கும் பயன்படுத்த முடியும் என்று ஜியோ கூறியுள்ளது.
பார்தி ஏர்டெல் நிறுவனம் 18 ஆயிரத்து 699 கோடி ரூபாய்க்கும், வோடபோன் ஐடியா நிறுவனம் 1993 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்திருப்பதாக மத்திய தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது.