இந்திரா காந்தி காலத்தில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது தவறு என காங்கிரஸ் எம்.பி. ராகுல் கூறியுள்ளார்.
அமெரிக்க கார்னல் பல்கலைக்கழக பேராசியரும், இந்தியாவின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகருமான கவுசிக் பாசுவுடன் நடந்த உரையாடலில் ராகுல் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசும்போது, நாட்டின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட காங்கிரஸ் கட்சியில்தான் ஜனநாயகம் அதிகம் இருப்பதாகக் கூறிய ராகுல், பாரதிய ஜனதா, பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளில் அத்தகைய ஜனநாயகம் இல்லை என்று குறிப்பிட்டார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு நாடு முழுவதும் தனது இயக்கத்தைச் சேர்ந்தவர்களை முக்கியப் பொறுப்புகளில் நியமித்து வருவதாகவும் ராகுல் தெரிவித்தார்.