2050 ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் கிட்டத்தட்ட 250 கோடி பேர் அல்லது நான்கு பேரில் ஒருவருக்கு செவித்திறன் குறைபாடு ஏற்படலாம் என உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3 ஆம் தேதி உலக செவிப்புலன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில், வாழ்க்கை முறை, தொற்றுநோய்கள் உள்ளிட்ட காரணங்களாலும் செவித்திறன் குறைபாடு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
அடுத்த 30 ஆண்டுகளில் செவித்திறன் குறைபாடுடையவர்களின் எண்ணிக்கை 1.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.