மெக்சிகோவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து சினிமா தியேட்டர்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்டவை மீண்டும் திறக்கப்பட்டன.
கொரோனா வைரஸ் பரவலால் கடந்த ஆண்டு மூடப்பட்ட திரையரங்குகள் ஓர் ஆண்டுக்கு பின் திறக்கப்பட்டதால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மெக்சிகோ சிட்டியில் உள்ள மெழுகு அருங்காட்சியகமும் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.
நீண்ட நாட்களுக்கு பின் அங்கு குவிந்த மக்கள் தலைவர்களின் மெழுகு சிலைகளுடன் நின்று புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.