கொரோனா வைரஸ் பரவல் இப்போது கட்டுக்குள் வந்து விட்டதாக உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால திட்ட இயக்குநர் மைக்கேல் ரயான் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் செய்தியாளர் சந்திப்பில் இதை தெரிவித்த அவர், இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்து விடும் என்பது யதார்த்தமல்ல என்றும் கூறினார்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளால், கொரோனாவால் ஏற்படும் மரணங்களையும், சிக்கல்களையும் தடுக்க முடியும் என்ற அவர், இனி, கொரோனா பரவலை எப்படி கூடிய அளவுக்கு குறைப்பது என்பது பற்றி உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.