தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவர் கட்சியின் தலைவர்கள் ரேணிகுண்டா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
விமான நிலையத்தில் சந்திரபாபு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். திருப்பதி மாவட்ட கண்காணிப்பாளர் வெங்கட அப்பளா, சந்திரபாபு நாயுடுவை ஊருக்குள் வரக்கூடாது என்று தடை விதித்திருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரவு 11 மணிக்கு மேல் 5 ஆயிரம் பேரை திரட்டி போராட்டம் நடத்த தெலுங்குதேசம் கட்சியினர் திட்டமிட்டிருந்ததாக விளக்கம் அளித்தார்.