பெட்ரோல், டீசல் விலை கடந்த 15 நாட்களாக உயர்ந்து லிட்டர் 100 ரூபாயை நோக்கி வெற்றி நடைபோட்டு வரும் நிலையில் அதன் மீதான வரிச்சுமையைக் குறைக்க மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வந்த நிலையில்,கொரோனா மீட்பு நடவடிக்கையாக வரிகள் உயர்த்தப்பட்டதால் விலை கடுமையாக உயர்ந்துவருகிறது.
பெட்ரோல் டீசல் விலையில் 60சதவீதத் தொகை வரிகளுக்கே போய் விடுகிறது.
இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளுடன் மத்திய நிதியமைச்சகம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
விரைவில் வரிக்குறைப்பு மூலமாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.