44 நாட்களாக நடந்த நட்கொடை திரட்டும் இயக்கத்தின் கீழ், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட 2 ஆயிரத்து 100 கோடிக்கும் அதிகமான நிதி கிடைத்துள்ளது.
அயோத்தியாவில் ராமருக்கு பிரம்மாண்ட கோவில் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது. அதற்கு ஆயிரத்து 100 கோடி ரூபாய் செலவாகும் என கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை கணக்கிட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி முதல் பொதுமக்களிடம் நன்கொடை திரட்டும் இயக்கம் துவக்கப்பட்டது. அதில் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக கிடைத்துள்ளது.
ராமர் கோயில் வளாக மொத்த கட்டுமானத்திற்கு 1100 கோடி ரூபாயும், அதில், கோவிலுக்கு மட்டும் 300 கோடி ரூபாய் முதல் 400 கோடி ரூபாய் வரையும் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.