குஜராத்தில் 81 நகராட்சிகள், 31 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 231 தாலுகா பஞ்சாயத்துக்களுக்கான தேர்தலில் வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
இதற்காக மாநிலம் முழுவதும் 36 ஆயிரத்து எட்டு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 3 கோடி பேர் இந்த தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளனர்.
போலீசார், ஊர்க்காவல் படையினர், துணை ராணுவம் என ஒரு லட்சத்திற்கும் அதிகமான காவல் படையினர் தேர்தல் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 2 ஆம் தேதி எண்ணப்படும்.
கடந்த வாரம் நடந்த மாநகராட்சி தேர்தலில் மாநிலத்தில் உள்ள அனைத்து 6 மாநகராட்சிகளையும் பாஜக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.