தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளதால் எம்.எல்.ஏ. அலுவலகங்களை பூட்டி சீல் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் எம்.எல்.ஏ.க்களின் அதிகாரம் இன்றுடன் முடிவடைந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களுக்கும் அவரவர் தொகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் மூடப்படுமென ஆணையம் கூறியுள்ளது.
இதற்காக ஞாயிற்றுக்கிழமை முதல் எம்.எல்.ஏக்களின் அலுவலகங்களை பூட்டி சீல் வைக்கப்படும் என்றும், எம்.எல்.ஏ.க்களின் சொந்த பொருட்கள் மற்றும் கோப்புகள் இருந்தால் அவற்றை காலி செய்து அறையை ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.