உணவு கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டம் மத்திய பிரதேசத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்காக குற்றவியல் தண்டனை சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அந்த மாநிலத்தில் உணவு கலப்படத்திற்கான தண்டனை முதலில் 6 மாதங்களாக இருந்து பின்னர் 3 வருடங்களாக உயர்த்தப்பட்டது.
மக்களின் உயிருடன் விளையாடும் உணவு கலப்படத்தை விட பெரிய குற்றம் எதுவும் இல்லை என்பதால் இந்த அளவுக்கு தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது என மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
காலவதியான பொருட்களை விற்பவர்களை தண்டிப்பதற்கான சட்ட வழிமுறைகளுக்கும் மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.