சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளை கண்காணிக்க 48 பறக்கும் படை குழுவும் 48 நிலையான கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றை, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து ஆணையர் பிரகாசுகம், காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலும் சேர்ந்து கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ், தேர்தல் பணியில் 40000 பேர் ஈடுபடுவார்கள் என்றும், தேர்தல் சம்மந்தமான புகார்களை தெரிவிக்க 1950 என்ற நம்பர் அறிமுகப்படுத்தபட்டுள்ளதாகவும் கூறினார்.
அனுமதிக்கபட்ட வீட்டின் சுவர்களில் மட்டுமே தேர்தல் விளம்பரங்களை எழுத வேண்டும் என்றார். மாற்று திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் தபால் மூலம் தங்கள் வாக்குகளை செலுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.