கொல்கத்தாவில் அமலாக்கத்துறையினரும் சிபிஐ அதிகாரிகளும் தனித்தனியாக 15 இடங்களில் அதிரடிசோதனை நடத்தினர்.
இதில் எல்லைத் தாண்டி கால் நடை வியாபாரம் செய்யும் ஒரு நிறுவனம், ஒரு மில் ,ஒரு நிலக்கரி சுரங்கத் தொழில் நிறுவனம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை செய்யப்பட்டது.
பல கோடி ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளை கண்டுபிடித்துள்ள அதிகாரிகள் வெளிநாடு வங்கியில் உள்ள கணக்குகளை முடக்க வெளியுறவு அமைச்சகத்திடம் பரிந்துரை செய்துள்ளனர்.