எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் தனியார் தொழில் முனைவோருக்கு அனுமதி அளிக்கப்படுமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் மத்திய பட்ஜெட் அறிவிப்புகளை அமல்படுத்துவது குறித்த காணொலி கருத்தரங்கில் பேசிய அவர், புதிய தொழிலகங்களும் சிறு,குறு தொழில்களும் தற்சார்பு இந்தியாவின் அடையாளங்கள் என்றார்.
கொரொனா காலத்தில் சிறு,குறு தொழில் முனைவோர் 90 லட்சம் பேருக்கு அரசு கடனுதவி வழங்கி உள்ளதாகவும், 2லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரத்தில் வங்கி, காப்பீடு துறைக்கு நல்ல எதிர்காலம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனால் தான் காப்பீடு துறையில் 74 சதவிகிதம் அளவுக்கு அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்துள்ளதாகவும், ஆயுள் காப்பீடு நிறுவன பங்குகள் விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.