மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் www. cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சி-டெட் (CTET) எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தி வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சிப் பெற்றால், சி.பி.எஸ்.இ. நவோதயா, கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றலாம்.
கடந்த மாதம் 31 ஆம் தேதி நடைபெற்ற மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில், முதல் தாளில் 4 லட்சத்து 14 ஆயிரத்து 798 பேரும் இரண்டாம் தாளில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 501 பேரும் தகுதி பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.