மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.
மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், கேரளம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த சில நாட்களாக வீழ்ச்சியைக் கண்டுள்ளன. இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஆயிரத்து 88 புள்ளிகள் சரிந்து 49 ஆயிரத்து 951 ஆக இருந்தது.
தேசியப் பங்குச்சந்தை நிப்டி 270 புள்ளிகள் சரிந்து 14 ஆயிரத்து 827 ஆக இருந்தது. தனியார் வங்கிகளின் பங்கு விலை 4 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தது.