மெச்கிகோவின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான தியோதிஹுகான் பிரமிடுகளை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த பல மாதங்களாக மெக்சிகோவிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தியோதி ஹூகான் நகரத்தில் உள்ள பிரிமிடை பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் நேற்று முதல் அங்குள்ள பிரமிடுகள், தொல்பொருள் மண்டலம் உள்ளிட்டவற்றை சுற்றிப்பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை பரிசோதனை, முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.