மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில், கடைசி வாய்ப்பாக, கடந்த அக்டோபரில் நடந்த தேர்வில் பங்கேற்க முடியாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க இயலாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்து விட்டது.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த சிவில் சர்வீசஸ் முதனிலை தேர்வில் கலந்து கொள்ள முடியவில்லை என கடைசி வாய்ப்பு மட்டுமே பாக்கி இருந்த சில தேர்வர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினர்.
இந்த ஆண்டு நடக்கும் முதனிலைத் தேர்வில் பங்கேற்க தங்களுக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. இந்த மனுக்களை நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.