இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 353 புள்ளிகள் அதிகரித்து 50 ஆயிரத்து 106 புள்ளிகளில் வர்த்தகத்தை துவக்கியது.
தேசிய பங்கு சந்தையில் நிப்டி 113 புள்ளிகள் உயர்ந்து 14 ஆயிரத்து 820 புள்ளிகளில் வர்த்தகத்தை துவக்கியது. நிலக்கரி, சிமென்ட் மற்றும் வங்கி-நிதி நிறுவனங்களின் பங்குகள் உயர்வை சந்தித்தன.
சில மென்பொருள் நிறுவனங்கள், மருந்து -நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.