முற்றிலும் இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான கோவாக்சினின் 3 ஆம் கட்ட சோதனை முடிவுகள் இரண்டு வாரத்தில் வெளியாகும் என பாரத் பயோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார்.
இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகளை ஒன்றாக சேர்த்து நடத்தியிருந்தால் கோவாக்சினின் திறன் திட்டமிட்டபடி நிரூபிக்கப்பட்டிருக்கும் என்ற அவர், சில காரணங்களால் அது நடக்காமல் போய் விட்டது என்றார். கோவாக்சின் தடுப்பூசி, தென்னாப்பிரிக்க மரபணு மாற்ற வைரசையும் கட்டுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்படுவதாக அவர் கூறினார்.
அனைத்து சோதனைகளிலும் வெற்றி பெற்ற சீரம் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அவசரகால ஒப்புதல் வழங்கப்பட்ட கடந்த ஜனவரி 3 ஆம் தேதியே கோவாக்சினுக்கும் அரசு ஒப்புதல் வழங்கியது. ஆனால் 3 ஆம் கட்ட சோதனை நடக்காமல் ஒப்புதல் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.