மகாராஷ்டிராவை தொடர்ந்து மேலும் 7 மாநிலங்கள் யூனியன் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று கணிசமாக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த வாரம் 81 சதவீதம் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது.
அதே போன்று மத்திய பிரதேசத்தில் 43 சதவீதமும், பஞ்சாப்பில் 31 சதவீதமும், ஜம்மு காஷ்மீரில் 22 சதவீதமும் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
சத்திஷ்கரில் 13 சதவீதமும், ஹரியானாவில் 11 சதவீதமும் வைரஸ் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளது. டெல்லியில் 4.7 சதவீதம், கர்நாடகாவில் 4.6 சதவீதம் கொரோனா பாதிப்பு உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.