ஈஸ்டர்ன் கோல்பீல்டு நிறுவன சுரங்கங்களில் இருந்து நிலக்கரி கடத்திய வழக்கில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகனும் திரிணமூல் காங்கிரஸ் எம்பியுமான அபிஷேக் பானர்ஜியின் மனைவியிடம் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
இந்த நிலக்கரி கடத்தல் வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் பெயர் இல்லாத போதும், அபிஷேக் முகர்ஜியின் மனைவி ருஜிராவுக்கு நேற்று முன்தினம் சிபிஐ அதிகாரிகள் நேரில் சம்மன் வழங்கினர்.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டுக்கு வருவதற்கு சற்றுமுன்னர் மம்தா பானர்ஜி வந்து சென்றார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த வழக்கும், அதன் பின்னணியில் மம்தா பானர்ஜியின் வருகையும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.